Powered By Blogger

Sunday, October 14, 2012

தமிழ்நாடு


வேண்டும் அந்த தமிழ்நாடு ..
ஆறு மணிக்கு அலுவல் முடிந்து ,
வீடு திரும்பும் அப்பா ...
பன்னாட்டு நிறுவனங்களின்
ஆதிக்கமும் கலாச்சாரமும் ,
இல்லாத அளவான வருமானம்..
வரைமுறையுடன்  பழகும்  ஆண் பெண் நட்பு ..
டாஸ்மாக்குகள் இல்லாத வீதிகள் ..
குடிபழக்கம் இல்லாத மணமகன்கள் ..
ஆடைகளில் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும்
மணமகள்கள் ...
அலைபேசிகளின் ஆதிக்கம் இல்லாத ,
களங்கமில்லாத மாணவர்கள் நிறைந்த பள்ளிகள் ..
வெளிநாட்டு ஆடல் கலாச்சாரம் இல்லாத உணவு விடுதிகள் ..
நிம்மதியையும் , உண்மையான சந்தோஷங்களையும்
இழந்த , பண ஆதிக்கம் கொண்ட , தற்கால தமிழகத்தை அகற்றி 

இறைவா .. வேண்டும் அந்த நிம்மதியான பொற்கால தமிழ்நாடு .. 

No comments:

Post a Comment